London schoolgirl rape: 12 வயது பள்ளி மாணவி snapchatல் பேசிய இளைஞரால் கற்பழிப்பு

12 வயது நிரம்பிய, சிமினா என்ற பெணை, 2 தடவை கொடூரமாக கற்பழித்துள்ளார் ஒரு இளைஞர். முதன் முறையாக குறித்த பெண் ஸ்னப் சட் மூலமாக அந்த இளைஞரோடு தொடர்பில் இருந்துள்ளார். அந்த இளைஞர் சிமினாவை ஒரு இடத்திற்கு வருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். சிமினா அங்கே சென்ற வேளை, அவரை வலுக் கட்டாயமாக கற்பழித்துள்ளார். இதனை சிமினா எவரிடமும் சொல்லவில்லை.

பின்னர் மீண்டும் ஒரு தடவை அவரை மிரட்டி, மற்றுமோர் இடத்திற்கு சிமினாவை வரவளைத்த அந்த இளைஞர், மீண்டும் அவரை கற்பழித்துள்ளார். இதனால் மனம் உடைந்த அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார். 

சமூக ஆர்வலர் ஒருவர் இது தொடர்பாக குறிப்பிடுகையில். சிமினாவுக்கு பள்ளியிலும், வீட்டிலும் மற்றும் பொலிசாரும் நல்ல முறையில் கவுன்சிலிங் கொடுத்து இருந்தால். சிமினா இந்த தற்கொலை முடிவை எட்டி இருக்க மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதனை பொலிசார் மறுத்துள்ளார்கள். தாம் முடிந்த வரை சிமினாவுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் உதவி செய்ததாக DC குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த இளைஞரை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். அவர் மீது கற்பழிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது. ஆனால் கொலை வழக்கில் அவர் சிக்கவில்லை. 

Source: https://www.dailymail.co.uk/news/article-14288069/detective-rape-allegation-schoolgirl-saying-didnt-believe.html