இஸ்ரேலின் விமானப்படை மத்திய கிழக்கு பகுதியின் மிக முக்கிய விமானப்படையாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது பெருமளவில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு, இது இன்னும் ஒரு படி மேலே சென்றது. எந்த எதிரிகளையும் தடை தடையின்றி தாக்கும் திறன் கொண்டதாக மாறியுள்ளது.
இது ஈரானில் உள்ள ரஷ்ய மற்றும் ஈரானிய தயாரிப்பிலான வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்து, ஈரான் தலைவர்களை குறைந்த பாதுகாப்புடன் பதிலடி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது. நேற்று(15) தென் லெபனானில் ஹெச்பொல்லாவின் ஏவுகணை களஞ்சியங்களை அழித்ததுடன், அதன் உள்தொகுதி தலைமையகத்தில் இருந்த அதன் உச்ச தலைவர் மீது துல்லியமான குண்டுவீச்சு நடத்தியது இஸ்ரெல்.
சிரியாவில் இஸ்ரேலின் ஆற்றல் மிக முக்கியமானதாக இருந்ததால், அசாத் ஆட்சி கலைக்கப்பட்டது என்று சொல்லலாம். அந்த அதிர்ச்சி பின்னணியில், இஸ்ரேல் அந்த வாய்ப்பை பயன்படுத்தியது. இஸ்ரேலின் விமானப்படை அந்த நாட்டின் பெரும்பாலான வான் பாதுகாப்பு அமைப்புகளையும், சிரிய ராணுவ களஞ்சியங்களையும் அழித்தது. இதனை ரஷ்யாவால் கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. இறுதியாக உதவிக்கு வந்த ரஷ்ய கப்பல், தப்பினோம் பிழைத்தோம் என்று சிரிய கடல் பரப்பில் இருந்து விலகிச் சென்றது.