Ajith Racing: “உங்களை விரைவில் சந்திப்பேன்” – வீடியோ வெளியிட்ட அஜித்

 

நடிகர் அஜித் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த ஆண்டு முழுவதும் கார் ரேஸ் நடைபெறுவதால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று அஜித் அறிவித்திருந்தார். மேலும், துபாயில் நடைபெற்ற மிச்சிலின் துபாய் 24H பந்தையத்தில் அஜித்தின் கார் ரேஸ் அணியில் கலந்துகொண்டது. அஜித்தும் ரேஸி பங்கேற்றார். 

இதில் அஜித்தின் அணி மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது. ரேஸ்க்கு பிறகு அஜித் கொடுத்த பேட்டி டிரெண்டானது. ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த அஜித் தொடர்ந்து வைரலாகி வந்தார். இந்த நிலையில் அஜித் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், ” கார் ரேஸ் பந்தைய கண்காணிப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மருத்துவக் குழுவினர், அஜித் குமார் ரேசிங்க் அணி என அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளேன். உங்கள் ஆதரவு, வாழ்த்துகளுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். உங்கள் அழகான குடும்பங்களை விரைவில் சந்திப்போம். உங்கள் நலனை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று பேசியுள்ளார். 

அஜித்தின் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.