சற்று முன்னர் நேட்டோ விமானங்கள், ரஷ்யாவின் போர் விமானங்களை தாக்க புறப்பட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலந்து நாட்டின் எல்லையில், ரஷ்ய போர் விமானங்கள் பறப்பது, நேட்டோ தளத்தில் உள்ள ராடர் திரையில் தெரிந்துள்ளது. இதனை அடுத்து மூன்று F16 ரக போர் விமானங்களை நேட்டோ படையணி, அனுப்பியுள்ளது. போலந்து நாட்டு எல்லைக்குள், ரஷ்ய விமானம் வந்திருந்தால் அதனை சுட்டு வீழ்த்த கடுமையான உத்தரவு பிறப்பிக்கபப்ட்டு இருந்தது.
இன் நிலையில் உக்ரைன் மற்றும் போலந்து ஆகிய நாட்டு எல்லையில், போலந்துக்கு மிக அருகாமையில் உள்ள உக்ரைன் நகரம் ஒன்றின் மீது கடுமையான தாக்குதலை ரஷ்ய விமானம் நடத்தியுள்ளது. இந்த நகரத்தில் பொது மக்களை தவிர எந்த ஒரு ராணுவத் தளமும் இல்லை. இது நேட்டோ தளத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், அமைந்துள்ளது என நேட்டோ பேச்சாளர் தெரிவித்துள்ளார். https://www.msn.com/en-gb/news/world/nato-war-planes-scrambled-as-putin-launches-huge-bombardment-and-poland-on-full-alert/ar-AA1xebhS?ocid=hpmsn&cvid=55e7a75c51ea4a7484d0d8808460cd39&ei=19
இதேவேளை போலந்து நாடு அதி உச்ச பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்துள்ளது. காரணம் ரஷ்யாவின் அணு குண்டை தாங்கிச் செல்லும் TU-21 விமானமும் போலந்து நாட்டுக்கு மிக அருகாமையில் சென்றுள்ளது. இதனால் தற்போது பெரும் பதற்ற நிலை அங்கே தோன்றியுள்ளது. தாக்கப் பட்ட உக்ரைன் நகரம், எரிந்துகொண்டு இருக்கும் வீடியோ காட்சிகள் கிழே இணைப்பு.