Facebook: 3600 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் பேஸ்புக்..!

சுமார் 3600 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்யப் போவதாக பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் AI டெக்னாலஜி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் AI டெக்னாலஜியை பயன்படுத்த தொடங்கியுள்ளன. இந்த சூழலிப் மெட்டா நிறுவனம் பேஸ்புக் ஊழியர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், தனது நிறுவனத்தில் உள்ள 3600 ஊழியர்களை பணிநீக்கம்  செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், நிறுவனத்தின் கொள்கை சீரமைப்பு பணியாக பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும், எதிர்ப்புகளை பூர்த்தி செய்யாத 5% பணியார்களை நீக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  மெட்டா நிறுவனத்தில் 72000 பேர் பணியில் உள்ளனர். அதில் 5% என்பது 3600 பணியாளர்களை குறிக்கிறது.

மார்க் ஜூக்கர்பெர்க் அறிவிப்பால் பேஸ்புக் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.