Yoon Suk Yeol: அதிபர் யூன் சுக் அதிரடியாக கைது – பதற்றத்தில் தென்கொரியா

தென்கொரிய அதிபரை அநாட்டு புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். தென்கொரிய வரலாற்றில் அதிபர் ஒருவர் பதவியில் இருக்கும் போதே கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில், வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது எதிர்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தை முடக்க திட்டமிடுவதாக கூறப்பட்டது. இதை காரணம் காட்டு தென்கொரிய அதிபரான யூன் சுக்-இயோல் அவசர ராணுவ நிலையை பிரகடனப்படுத்தினார். 

இதனால் நாடு முழுவதும் பதற்றமும், அசாதாரண சூழலும் நிலவியது. அவசர நிலை பிரகடனத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அடுத்த சில மணி நேரங்களில் அது திரும்ப பெறப்பட்டது. நாட்டை பதற்றமடைய செய்ததால் அதிபர் யூன் உடனே பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளர்ச்சியாளர்களுக்கும் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்தனர். 

இதனால் அதிபர் யூன் – எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மொத்தமுள்ள 300 எம்பிகளில் 204 எம்பிகள் அந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளித்ததால் யூன் பதவி நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து யூன் சுக் இயோலுக்கு எதிராக கொரிய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததால், அவரை புனலாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். அதிபரை  அவரது வீட்டில் வைத்து கைது செய்ததால் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.