அண்ணாத்தக்கு அழகு சேர்த்த நண்பன்! “உன்போல் யாரும் இல்லையே…” – ரஜினிக்கு கமல் நிறுவனத்தின் ஸ்பெஷல் பாடல் வெளியீடு!
திரையுலகின் அரிய நட்பு: ரஜினிக்கு முப்பெரும் விழா! ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நெகிழ்ச்சி வாழ்த்து!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் டிசம்பர் 12)உலகம் முழுவதும் அவரது ரசிகர்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ரஜினியின் பிறந்தநாள், சினிமாவில் 50வது ஆண்டு, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸ் என முப்பெரும் விழாவாக மாறி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சிக் கடலை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர், முதலமைச்சர், திரையுலகைச் சேர்ந்த சக நடிகர்கள் எனப் பலரும் ரஜினிக்கு வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், அவரது நீண்ட நாள் நண்பரும், உலக நாயகனுமான கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஒரு சிறப்புப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
பாடல் வரிகளில் உருகிய நட்பு!
கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்ததைத் தொடர்ந்து, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் பாடல் காணொளியில், ரஜினியின் புகழ் பாடும் வரிகளும், அவர்கள் இருவருக்கும் இடையேயான அரிய நட்பை வெளிப்படுத்தும் வரிகளும் இடம்பெற்றுள்ளன.
அந்தப் பாடலின் நெகிழ்ச்சியான வரிகள் இதோ:
“உன் போல் யாருமில்லையே.. ஈரேழு உலகம் தேடியுமே..
மாறாத வைரம் உன் அகமே.. என் அரும் நண்பனே.. நண்பனே… நண்பனே…
ஊர் போற்றும் இன்பனே… இன்பனே… இன்பனே…
நீ தனி நான் தனி என்றில்லை… என்றுமே நாம் அது நிரந்தரமே.. நாம் அது நிரந்தரமே”
இந்த சிறப்புப் பாடல் வீடியோ, ரஜினிக்கும் கமலுக்கும் இடையேயான பிரிக்க முடியாத நட்பின் ஆழத்தைக் காட்டுவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.