வங்கதேச பண மோச விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மருமகள் இங்கிலாந்து அரசின் அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவின் மருமகளான துலிப் சித்திக் வங்கதேசத்தில் நடந்து வரும் நிதி மோசடி தொடர்பான விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அவரிடம் இங்கிலாந்து அரசு சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் மாணவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த கலவரத்தில் 500பேர் உயிரிழ்சந்தனர். ஹசீனாவின் வீடு, அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. இதனால் ஹசீனா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வங்கதேசத்தில் இருந்து தப்பி சென்று இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இந்த சூழலில் பண மோசடி புகாரில் ஹசீனாவின் மருமகளும், இங்கிலாந்து நாட்டு அமைச்சருமாக இருந்த சித்திக் சிக்கியுள்ளார். அவர் மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், சித்திக் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகவும், பிரதமருக்கு விரிவான விளக்க கடிதம் எழுதியுள்ளதாகவும், தேசத்துக்காக விசுவாசமாக இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.