120 ஏக்கர் பூர்வீகச் சொத்தை ஷங்கரால் இழந்த தில்ராஜ்: கேம் சேஞ்சர் நஷ்டம்

பல படங்களை இயக்கி, பல தயாரிப்பாளர்களை மொட்டையடித்து, கண் காணாத தேசத்திற்கு அனுப்பியவர் இயக்குனர் ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்லிச் சொல்லியே அவரை ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டார்கள். 

தொடர்ச்சியாக தோல்விப் படங்களை கொடுத்து வரும் ஷங்கரை வைத்து, தில்ராஜ் , கேம் சேஞ்சர் படத்தை எடுத்தார், 500 கோடியில் தயாரான இந்தப் படத்திற்கு, 100 கோடி வரை புரோமோஷனுக்காக மட்டும் செலவு செய்துள்ளாராம் தில்ராஜ்.

ஆனால் படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஷங்கர் இயக்கிய ஜென்டில் மென், இந்தியன் போன்ற படங்களில் சாயல் கேம் சேஞ்சரில் உள்ளது என்கிறார்கள் படத்தைப் பார்த்தவர்கள். 500 கோடி ரூபாவைப் பிரட்ட, தில்ராஜ் தனது பூர்வீகச் சொத்தான பெரிய ஒரு வீடும் அதனோடு சேர்ந்து உள்ள 120 ஏக்கர் காணியையும் அடமானம் வைத்தே பணத்தை புரட்டியுள்ளார்.

ஆனால் தற்போது பணம் கொடுத்த பைனான்சியர், தில்ராஜுக்கு சொந்தமான அந்த இடத்தை கையகப்படுத்தியுள்ளாராம். போட்ட காசு இனி திரும்பி வரப்போவது இல்லை என்பது தெளிவாகப் புரிகிறது.  இதனால் படு நஷ்டம் அடைந்துள்ள தில்ராஜ், நடுத்தெருவுக்கு வந்துள்ளதாக கூறுகிறார்கள்.