இதுவரை எந்த ஒரு இந்திய சினிமா நடிகர்களுமே இப்படிச் செய்து பார்த்ததே இல்லை. பொதுவாக இங்கிலாந்து அல்லது ஐரோப்பிய நாடுகளில், பிறந்து பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் வளர்ந்த ஆண்களே இவ்வாறு தமது மனைவிக்கு செய்வார்கள் என்று சொல்லலாம். இந்த வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. தல அஜித்தின் மனைவி ஷலினி காரில் வந்து ஏறும் போது அவர் அணிந்து இருந்த வெள்ளை நிற சல்வார், கார் கதவுக்கு வெளியே தொங்கியது.
அதனை உடனே எடுத்து உள்ளே போட்டு, ஷாலினியின் கால்களில் அது சரியாக நிற்க்கும் படி செய்கிறார் தல அஜித். அத்தோடு மகள் காரில் ஏற, கதவை திறந்து விடுகிறார். இப்படியான ஒரு நல்ல மனிதர், தலைக்கனம் இல்லாத ஒரு நபரை பார்பது மிக மிக அரிது என்று தான் சொல்லவேண்டும்.. இந்தியாவில் பெண்களை அவமானப்படுத்துவது, பெண்கள் அல்லது மனைவி என்றாலே அடிமை என்று நினைப்பது, கூட்டு பாலுறவு, கற்பழிப்புக்கு மத்தியில். பெண்களை எப்படி நடத்தவேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார் அஜித் குமார்.
ஒரு நல்ல கணவன், அதுவும் ஒரு நல்ல ஆண் மகனாக எப்படி இருக்கவேண்டும் என்று தல அஜித் முன் உதாரணமாக இருந்து காட்டியுள்ளார். நிச்சயம் அவர் ரசிகர்கள் இதனை பின்பற்றுவார்கள். தான் ஒரு பெரிய நடிகர், கார் ரேஸ் வீரர் என்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாத , மிகவும் சிம்பிளான ஒரு மனிதர் அஜித் குமார், என்று தான் கூறவேண்டும். கீழே வீடியோ இணைப்பு.