லண்டன் பிராட்ஃபேட்டில் பஸ் நிலையத்தில் நிறுகொண்டு இருந்த, 17 வயது வெள்ளை இன மாணவரை, 5 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திய சம்பவத்தில். 5 பேரையும் பொலிசார் வலைவீசி தேடி கைதுசெய்துள்ளார்கள். இவர்களில் 3 பேர் மீது கொலைக் குற்றமும் ஏனைய 2 பேர் மீது அதற்கு உடந்தை என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில். இவர்கள் அனை அனைவரும் பாக்க்கிஸ்தானிகள் என்று செய்தி வெளியாகியுள்ளது. இந்தக் குழுவில் 16 வயதுடைய நபர் ஒருவர் மற்றும் 17 வயதுடைய நபர்கள் அடங்குகிறார்கள்.
இவர்கள் தொமஸ் டெயிலர் என்று 17 வயது மாணவை கத்தியால் குத்திவிட்டு, அவர் நிலத்தில் விழுந்த பின்னர் கூட காலால் உதைந்து அவரை மேலும் காயப்படுத்தியுள்ளார்கள். இதனால் தொமஸ் டெயிலரின், விலா எலும்புகள் கூட உடைந்து, அது நுரையீரலை குத்தி கிழித்துள்ளது என்று பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகள் அனைவரும் சிறுவர்கள் என்ற அதிர்ச்சி ஒரு புறம் இருக்க. அரசாங்க வக்கீல், நீதிமன்றில் கடுமையாக வாதாடியுள்ளார். இவர்கள் 5 பேரும் குறித்த மாணவன் இறக்க வேண்டும் என்று கருதியே அவரை தாக்கியுள்ளார்கள்.
தாம் என்ன செய்கிறோம் என்பதனை தெரிந்து தான் செய்து இருக்கிறார்கள். எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்ட நிலையில். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அனைவரையும் சிறுவர் சிறைச்சாலையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். 17 வயதில் இந்த அளவு கொடூரமாக இவர்கள், இருப்பார்கள் என்று என்னால் நினைத்துக் கூட பார்க முடியவில்லை என்று பல பிரித்தானியர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.