Actor Ajith தனது காரின் கலரை விஜய் கட்சியின் கலரில் அடித்தாரா – TVK மறைமுக ஆதரவு கொடுத்தாரா

சில நாட்களாக பார்த்தால் இந்தியா முழுவதுமே அஜித் பற்றித் தான் பேச்சு அடிபட்டுக் கொண்டு இருக்கிறது. அதுமட்டும் அல்ல டுபாயில் இதுவரை நடந்த கார் ஓட்டப் பந்தயத்தில் இது தான் மிகச் சிறப்பாக நடந்த பந்தையம் என்று டுபாய் அரசே ஒத்துக்கொண்டுள்ளது. இன் நிலையில் அஜித் 3ம் இடத்தைப் பிடித்து, தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். அவரது ரேசிங் கார் நிறம் சிவப்பு மற்றும் மஞ்சல் நிறத்தால், வண்ணம் பூசப்பட்டு இருந்தது. உடனே இதனை விஜய் ரசிகர்கள், அஜித் தனது ஆதரவை மறைமுகமாக காட்டி உள்ளார் என்று கூறிவருகிறார்கள்.

ஆனால் அஜித் ரசிகர்கள் கடும் காண்டாகி, விஜய் ரசிகர்கள் மீது சமூக வலையத் தளங்களில் வசைபாடி வருகிறார்கள். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால். அஜித் மற்றும் விஜய் ஆகியோர் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கார் பந்தயத்தில் அஜித் 3ம் இடத்தை பிடித்த உடனே, தளபதி விஜய் அவர்கள் டெலிபோனில் வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார். ஆனால் அஜித் காரைப் பார்த்தல், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறத்தில் தான் இருக்கிறது. அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. 

கேட்டால் ஸ்பெயின் நாட்டு பெயிண்டர் ஒருவரே, அஜித் காருக்கு வண்ணம் தீட்டினார் என்று கூறப்படுகிறது. ஸ்பெயின் நாட்டு நபருக்கு விஜய் பற்றி தெரிந்து இருக்குமோ ? ஆனால் தல அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்களோடு கடுமையான இன்ரர் நெட் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.