Posted in

தென்னிந்தியாவையும் அதிர வைத்த அந்த போஸ்… கேரளா மண்ணில் ‘தளபதி’ ஆதிக்கம்! “Bha Bha Ba”

கேரளா மண்ணில் ‘தளபதி’ ஆதிக்கம்! திலீப் படத்தில் வரிசைகட்டும் ‘கில்லி‘ ரெஃபரன்ஸ்! மோகன்லால் செய்த அந்த போஸ்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!

கொச்சி: சினிமா பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தாலும், தளபதி விஜய்யின் மிரட்டலான மாஸ் கொஞ்சமும் குறையவில்லை என்பதற்குச் சான்றாக, இன்று வெளியாகியுள்ள ஒரு மலையாளத் திரைப்படம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் அதிர வைத்துள்ளது!

மலையாள முன்னணி நடிகர் திலீப் நடிப்பில் வெளியாகியுள்ள ‘Bha. Bha. Ba’ திரைப்படம்தான் இப்போது சோஷியல் மீடியாவின் ‘ஹாட் டாபிக்’. இந்தப் படம் முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்கான ஒரு கொண்டாட்டமாகவே அமைந்துள்ளது!

கில்லி கார் முதல் ‘தளபதி காலனி’ வரை!

படம் முழுக்க விஜய்யின் அடையாளங்கள் இரைந்து கிடக்கின்றன. படத்தைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கத்தித் தீர்க்கின்றனர். அப்படி என்னதான் இருக்கிறது?

  • அந்த மேஜிக் நம்பர்: படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காரின் பதிவு எண் TN-59-100. இது ‘கில்லி’ படத்தில் விஜய் ஓட்டிய அதே ஜீப்பின் பதிவு எண்!

  • அர்ஜுனரு வில்லு: விஜய்யின் எனர்ஜி பாடலான ‘அர்ஜுனரு வில்லு’ படத்தில் அதிரடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • தளபதி காலனி: படத்தில் ஒரு இடத்திற்கு ‘தளபதி காலனி’ என்றே பெயர் வைத்துள்ளனர். இது விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மோகன்லால் – விஜய்: ‘ஜில்லா‘ பாணியில் ஒரு பதிலடி?

இந்தத் திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அவரது பாத்திரத்தின் பெயரே ‘கில்லி பாலா’ என்பதுதான் ஹைலைட்!

அதுமட்டுமல்லாமல், மோகன்லால் படத்தில் கொடுக்கும் ஒரு குறிப்பிட்ட போஸ், அப்படியே மெர்சல் படத்தில் விஜய் செய்த மேஜிக் போஸ் போலவே இருப்பதாகக் கூறி வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

“ஜில்லா படத்தில் மோகன்லால் ஸ்டைலை விஜய் இமிடேட் செய்தார்… இப்போது அதற்கு ஈடாக மோகன்லால் விஜய் ஸ்டைலைச் செய்கிறார்!” என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ராவணப்பிரபுவா? மெர்சலா? பற்றி எரியும் விவாதம்!

அதே சமயம், இது விஜய்யின் ஸ்டைல் இல்லை என்றும், மோகன்லால் தனது பழைய ஹிட் படமான ‘ராவணப்பிரபு’ படத்தில் செய்த ஸ்டைலையே மீண்டும் செய்துள்ளார் என்றும் ஒரு தரப்பினர் விவாதித்து வருகின்றனர். எது எப்படியோ, படம் முழுக்க ‘கில்லி’ மற்றும் விஜய்யின் ரெஃபரன்ஸ்கள் தெறிக்கின்றன என்பது மட்டும் உண்மை!

திரைப்படமே தளபதிக்கு ஒரு சமர்ப்பணம் போல இருப்பதாகத் திரையரங்குகள் அதிர்கின்றன.