தேசிய பட்டியலில் தெரிவான ரணில் இலங்கையின் பிரதமர் ஆன அதிசயம்: சிங்கள மக்கள் இதனை ஏற்க்கப் போவது இல்லை !

இந்த செய்தியை பகிருங்கள்

கடந்த தேர்தலில் படு தோல்வியை தழுவிய ஐக்கிய தேசிய கட்சி, எந்த ஒரு ஆசனத்தையும் கைப்பற்றவில்லை. பல இடங்களில் போட்டியிட்டு தோற்றது. இருப்பினும் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையில், அந்தக் கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ரணில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இன்றைய தினம், கோட்டபாய ரணிலை இலங்கையின் பிரதமராக அறிவித்துள்ளார். இது சிங்கள மக்களை மேலும் அதிருப்த்திக்கு உள்ளாகியுள்ளது. தன் சொல் பேச்சு கேட்க்கக் கூடிய நபர் ஒருவரையே கோட்டா தேடிக் கொண்டு இருந்தார். ஒரு பொம்மை போல இருக்க கூடிய நபர் வேறு யாரும் அல்ல, ரணில் தான். இவரே

ராஜபக்ஷர்களின் மிக நெருங்கிய நண்பர். எனவே ரணிலை இலங்கையின் பிரதமராக நியமித்துள்ளார் கோட்டா. ஆனால் சஜித் தரப்பு மற்றும் JVP கட்சி இதனை கடுமையாக எதிர்க்கும் என்று அறியப்படுகிறது. எனவே மீண்டும் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us