ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த நாள் முதல், பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. சில நாட்களில் உக்ரைனை பணிய வைக்க முடியும் என்று ரஷ்யா நம்பியது தான் வரலாற்றில் மிக முக்கியமான முட்டாள் தனமான நம்பிக்கை. ஓவர் கான்பிடன்ஸ் கூடாது என்பார்கள். அதற்கு இதுதான் சிறந்த உதாரணம். விமானங்கள் பலவற்றை இழந்து, நூற்றுக் கணக்கான ராங்கிகளை இழந்து, ஆயிரக் கணக்கில் படை வீரர்களை இழந்த ரஷ்யா. இறுதியாக வட கொரியாவிடம் உதவி கேட்க்க. மிகவும் ரகசியமான முறையில் தனது படிகளில் ஒரு பிரிவை வட கொரியா ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதனை ரஷ்யா பல மாதங்களாக மறுத்து வந்தது. ரஷ்ய படையில் வட கொரிய ராணுவம் இல்லை என்று ரஷ்யா முற்று முழுதாக மறுத்து வந்த நிலையில். உக்ரைன் ராணுவம் 2 வட கொரிய ராணுவச் சிப்பாய்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். சும்மா சொல்லக் கூடாது, உக்ரைன் ராணுவம் இவர்களை, மிகவும் மரியாதையாகத் தான் நடத்தி வருகிறது. அவர்கள் சிறையில் இருந்தபடி கோல குடிக்கும் காட்சியை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்த ஆதார புகைப்படத்தால் ரஷ்யா ஆட்டம் கண்டுள்ளது.
இனியும் உலகத்தை முட்டாளக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. ரஷ்யாவிடம் ஒட்டு மொத்தத்தில் மிஞ்சி உள்ளது அணு ஆயுதங்கள் தான். இதனை வைத்துக் கொண்டு தான் இவர்கள் தாம் ஒரு வல்லரசு என்று கங்கணம் கட்டி அலைகிறார்கள். அதிலும் எத்தனை வெடிக்கும் என்பது தெரியாது. ஏன் என்றால் இவற்றில் பல 1970களில் தயாரான அணு குண்டுகள், அதனை காவிச் செல்லும் ஏவுகணைகளை தான் ரஷ்யா புதிதாக வடிவமைத்துள்ளது.