சினிமா வேறு நிஜம் வேறு. திரைக்கு முன்னால் நாம் பார்க்கும் முகங்கள் நிஜ வாழ்வில் அதற்கு எதிர் மாறாக இருக்கிறார்கள். இதற்கு மிகப்பெரிய உதாரணம் வடிவேலு தான். நகைச்சுவையில் இவரை மிஞ்ச ஆள் கிடையாது என்பது சத்தியமான உண்மை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைக்கும் இவருக்கு நிஜ வாழ்வில் வேறு ஒரு கோர முகம் இருக்கிறது. அதாவது எவ்வளவுதான் ஒருவர் உயர்ந்த நிலைக்கு சென்றாலும் வந்த பாதையை மறந்து விடக்கூடாது. ஆனால் வடிவேலு ஏற்றி விட்ட ஏணிகளை எல்லாம் எட்டி உதைத்து வருகிறார்.
இதை கேப்டன் விஷயத்தில் நாம் கண்கூடாக பார்த்தோம். என்னதான் ஒருவர் மீது கோபம் இருந்தாலும் அவர் இறந்து விட்டால் இறுதி மரியாதை செலுத்துவது தான் நல்ல மனுஷனுக்கு அழகு. ஆனால் வடிவேலு அதை செய்ய தவறி இப்போது ஒட்டுமொத்தமாக கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார்.
அதிலும் விஜயகாந்த் இறப்பின் போது தலைமறைவாக இருந்த அவர் கலைஞர் 100 விழாவில் கலந்து கொண்டது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதில் மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. அதாவது அந்த விழாவில் பங்கேற்க வந்த ராஜ்கிரணையும் வைகை புயல் அவமதித்துள்ளார்.
அதாவது பிரபலங்களை பேட்டரி காரில் விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ராஜ்கிரனுக்கு அருகில் அமர்ந்து செல்வோம் என்று வடிவேலு எதிர்பார்க்கவில்லையாம். உடனே அவர் காரை நிறுத்த சொல்லிவிட்டு டிரைவருக்கு அருகில் அமர்ந்து சென்று இருக்கிறார். அப்போது ராஜ்கிரணை அவர் நிமிர்ந்து கூட பார்க்கவில்லையாம்.
வடிவேலுவுக்கு என் ராசாவின் மனசிலே படத்தில் வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்டது ராஜ்கிரண் தான். அதேபோல் தான் கேப்டனும் சின்ன கவுண்டர் மூலம் அவருக்கு வாழ்வு கொடுத்தார். ஆனால் இவர்கள் இருவரையும் அவர் மதிக்கவில்லை. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.