கர்நாடக இளைஞரால் கோவாவுக்கு வந்த ரஷ்ய சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

இந்த செய்தியை பகிருங்கள்

 

கோவாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. வடக்கு கோவாவில் அமைந்திருக்கும் ஆரம்போலில் உள்ள சொகுசு விடுதியில் ரஷ்யாவை சேர்ந்த பெண் தனது 12 வயது மகளுடன் வந்து தங்கி இருக்கிறார் .

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அந்த பெண் தன் மகளை விடுதியிலேயே விட்டுவிட்டு அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று இருக்கிறார். இதை நோட்டமிட்ட இளைஞர் ஒருவர் அந்த 12 வயது மகளை கவனித்து வந்திருக்கிறார். அந்த சிறுமி அருகே இருந்த நீச்சல் குளத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்று அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.

சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற தாய் விடுதிக்கு வந்ததும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். மகளுக்கு நேர்ந்த கொடுமையை கேட்டவர் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார் . போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விக்ரம் நாயக் என்பது தெரிய வந்தது.

சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்று கர்நாடகாவில் உள்ள தன் சொந்த ஊரான கட்காக்கியிருக்கு சென்று பதுங்கி உள்ளார் என்பது தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து உள்ளூர் போலீசார் உதவியுடன் விக்ரம் நாயக்கை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us