சிறுமிகள், பெண்களை கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யும் இளைஞர்

இந்த செய்தியை பகிருங்கள்

 

சிறுமிகள், பெண்களை கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யும் இளைஞரால் அதிர்ந்து போயிருக்கிறது நாகர்கோவில் .

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அடுத்த புத்தேரியில் வசித்து வருபவர் ஐயப்பன். இவரது மனைவி மாணிக்கரசி(45). இந்த பெண் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் வீடு தனி வீடாக அமைந்திருக்கிறது .

நேற்று முன்தினம் மாணிக்கரசி வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி இருக்கிறார். வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு அருகில் தண்ணீர் எடுக்கச் சென்றிருக்கிறார். தண்ணீர் எடுத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த போது கதவிற்கு பின்னால் இளைஞர் ஒருவர் மறைத்து நிற்பதை பார்த்திருக்கிறார். அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போடுவதற்குள், அந்த இளைஞர் அங்கு கடந்த அரிவாளை எடுத்து தலையில் பலமாக வெட்டி இருக்கிறார்.

வலியால் துடித்தபோது அவரை கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கடுமையாக தாக்கி இருக்கிறார். இதனால் மாணிக்கரசிக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் மீண்டும் தலையில் ஓங்கி வெட்டி இருக்கிறார். உடல் முழுவதும் ரத்த காயத்துடன் அந்த இளைஞரிடம் போராடிக் கொண்டிருந்தபோது, மாணிக்கரசியின் கணவர் வரும் சத்தம் கேட்டதால் அந்த இளைஞர் பின் வாசல் வழியாக தப்பி ஓடி இருக்கிறார். இதன் பின்னர் போலீசில் சென்று புகார் அளித்த போது இளைஞர் ஒருவரின் புகைப்படத்தை காட்டி அடையாளத்தை கேட்டபோது, அந்த இளைஞர் தான் என்று சொல்லி இருக்கிறார் மாணிக்கரசி.

புத்தேரிக்கு அருக அருகில் உள்ள ஆணை ஒற்றை என்கிற பகுதியைச் சேர்ந்தவர் தான் அந்த இளைஞர். 25 வயதாகும் அவரது பெயர் சந்தோஷ் என்பது தெரிய வந்துள்ளது. சந்தோஷ் மீது ஏற்கனவே சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த மூன்று வழக்குகள் , பெண்களை பின்தொடர்ந்து பாலியல் சீன்டல்களில் டுபட்ட வழக்குகள் என்று 6க்கும் மேற்பட்ட வழக்குகள் நிறைவு நிலுவையில் உள்ளன.

கடத்த மூன்று நாட்களுக்கு முன்புதான் ஒரு வழக்கில் கைதாகி பின்னர் விடுதலையாகி இருந்தார்,.

வடசேரி போலீசார் மாணிக்கரசி புகாரின் பேரில் 4 பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்தார்கள் செய்தார்

ஒரு பெண்ணை வீடு புகுந்து கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது கடுமையான வழக்கு பதிவு செய்யாமல் ஏற்கனவே சிறுமிகளை பாலியல் துன்புறுத்தால் செய்திருக்கும் நிலையில், பெண்களை பாலியல் சீன்டல்களைச்செய்திருக்கும் நிலையில் தற்போதும் அப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் மீது வெறும் சாதாரண அடிதடி வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

 

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us