சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை… ஆலங்குடி அருகே பரபரப்பு!

இந்த செய்தியை பகிருங்கள்

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மூக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் குமரேசன்(49). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை குமரேசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி மற்றும் திருநாவுக்கரசு ஆகியோருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் எதிர் தரப்பினர் தாக்கியதில் குமரேசன் மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், குமரேசன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். தகவலின் பேரில் செம்பட்டிவிடுதி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சொத்து தகராறில் விவசாயி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us