ஒன்றாக சேர்ந்து படிக்கிறோம் என்று வந்த சிறுவர்கள்! கூட்டாக சேர்ந்து சிறுமியின் கையை கட்டிப் போட்டு செய்த கொடூரம்

இந்த செய்தியை பகிருங்கள்

 

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியின் வீட்டில் ஒன்றாக சேர்ந்து படிக்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்த நான்கு மாணவர்கள் கூட்டாக சேர்ந்து அந்த சிறுமியின் கைகளை கட்டி போட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். காசிமேடு பகுதியில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

சென்னையில் ராயபுரம் காசிமேடு பகுதியில் வசித்து வரும் அந்த சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்கள் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் சிறுமி வீட்டிற்கு வந்து ஒன்றாக படிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்து சென்றிருக்கிறார்கள். அப்பொழுது சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து நான்கு சிறுவர்களும் சிறுமியின் கையை கட்டி போட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தாய் வீட்டிற்கு வந்ததும் அவரிடம் சொல்லி அழுதிருக்கிறார் சிறுமி. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், பள்ளி ஆசிரியரிடம் சென்று புகார் தெரிவித்து இருக்கிறார். அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்பதால் அந்த ஆசிரியரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஆசிரியர், இந்த சம்பவம் வீட்டில் நடந்திருக்கிறது என்பதால் காவல் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்த, அதன்படியே அந்த தாய் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு 13 வயதுடைய அந்த நான்கு சிறுவர்களயும் கைது செய்துள்ளனர். பின்னர் அந்த நான்கு சிறுவர்களும் கெல்லீஸ் பகுதியில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us