விஜய் நடித்த பீஸ்ட் படத்தை விட 10 மடங்கு தரமான படம் DON: அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயனா ?

இந்த செய்தியை பகிருங்கள்

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது பீஸ்ட் படம். குறித்த படத்தில் கதை என்று எதுவே இல்லை என்று பல ரசிகர்கள் குறை கூறி இருந்தார்கள். விஜய் நடித்த படங்களில் இதுவரை காலத்தில் மிகவும் மோசமான படம் பீஸ்ட் என்று அனைவராலும் வர்ணிக்கப்பட்ட நிலையில். தற்போது சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் டான். இது தமிழ் நாட்டில் தற்போது சக்கைப் போடு போடுகிறது. காலேஜில் படிக்கும் இளைஞர்களை முதலில் குறி வைத்து, ஆசிரியர்களை காட்டி, அத்தோடு அப்பா அம்மா பிள்ளைகள் மேல் வைத்திருக்கும் அன்பையும் காட்டி, ஒரு இளைஞன் எப்படி முன்னேறுகிறான் என்று இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது. அதிலும் சமுத்திர கனியின் நடிப்பு அபாரம்… வழமை போல சிவ கார்த்திகேயன்…

டான் படத்தில் ஒரு கலக்கு கலக்கியுள்ளார். படத்தில் நடித்த அனைவருமே தமது கதாபாத்திரத்தை சரி வர நடித்துள்ளார்கள். ஒரு உயிரோட்டம் உள்ள கதை. குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய படம். அது மட்டும் அல்ல, குறிப்பாக இளைய தலை முறையினர் பார்க்க வேண்டிய படம். சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை மிகவும் திறம்பட இயக்கியுள்ளார். படத்தை பார்த்த எவரும் கண்ணீர் சிந்தாமல் செல்லவும் மாட்டார்கள். முன்னேற துடிக்கும் இளைஞர்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளாமலும் செல்ல மாட்டார்கள். ஒட்டு மொத்தத்தில் 100 கோடி 120 கோடி என்று சம்பளம் பெற்று மொக்கை படங்களில் நடிக்கும், சில நடிகர்கள் மத்தியில், சிவ கார்த்திகேயன் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். சுருக்கமாகச் சொல்லப் போனால்… அடுத்த சூப்பர் ஸ்டார் சிவ கார்த்திகேயன் தான் என்று பேசும் அளவுக்கு அவர் சைலன்டாக வளர்ந்து வருகிறார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us