ரணில் வந்த உடனே இலங்கை ரூபாயின் விலை அதிகரித்து விட்டதாக நாடகம் ஆடும் அரசு !

இந்த செய்தியை பகிருங்கள்

ரணில் இலங்கையின் பிரதமர் ஆகியதால், ஒரே நாளில் இலங்கையின் ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை அரசு நாடகம் ஆட ஆரம்பித்து விட்டது. இலங்கை மத்திய வங்கியே இவ்வாறு அறிவித்தல் ஒன்றை விட்டு பெரும் பித்தலாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ரணில் இன்னும் அரசாங்கத்தை அமைக்கவே இல்லை. மேலும் சொல்லப் போனால் இலங்கையில் உள்ள எந்த ஒரு கட்சியும், ரணிலுக்கு கை கொடுக்கவும் இல்லை. ரணில் பல நாடுகளோடு பேச உள்ளதாக கூறும் நிலையில், பிரித்தானிய அரசு நேற்று(13) தனது மக்களுக்கு இலங்கை தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பிரித்தானிய மக்களும் இலங்கை செல்வதை தவிர்க்க ஆரம்பித்துள்ள நிலையில்… இலங்கை மேலும் அதள பாதாளத்தில்…

செல்ல உள்ளது. மே மாத இறுதியில் வட்டி செலுத்த வேண்டி இருக்கும். அதற்கான அமெரிக்க டாலர்கள் இலங்கையிடம் இல்லை. எனவே இலங்கையின் நிலை இம்மாத இறுதியில் மீண்டும் வெளிச்சத்திற்கு வர உள்ளது. ரணில் மட்டும் அல்ல, எந்த ஒரு அரசு வந்தாலும் குறைந்த பட்சம் 2 வருடங்கள் என்றாலும் பிடிக்கும் இலங்கையை ஒரு 20% விகிதத்தால் கட்டி எழுப்ப.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us