வீடியோ காலில் நிர்வாணமாக நின்ற பெண்! கால் ரெக்கார்டு செய்தவர் மரணம்

இந்த செய்தியை பகிருங்கள்

அந்த வாலிபர் மேல் இருந்த நம்பிக்கையில் வீடியோ காலில் நிர்வாணமாக நிற்க, அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக அந்த வாலிபர் அதை ரெக்கார்டு செய்து மிரட்ட, தனது நண்பர்கள் மூலமாக அந்த வாலிபரை அடித்து கொலை செய்துள்ளார் அப்பெண். முகநூல் பழக்கம் கொலையில் முடிந்திருக்கிறது.

ஹைதராபாத்தில் பிரசாந்தி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா ரெட்டி. 32 வயதான இவர் திருமணமானவர். இவருக்கு முகநூல் மூலமாக ஹைதராபாத் அம்மர் பேட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதான யாஸ்மா குமார் என்ற வாலிபர் அறிமுகமாகி இருக்கிறார். புகைப்பட கலைஞரான யாஸ்மா குமாருடன் சுவேதா ரெட்டி தொடர்ந்து முகநூலில் பழகி வந்திருக்கிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் முகநூல் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு அடிக்கடி பேசி வந்திருக்கிறார்கள். வீடியோ கால் மூலமாகவும் இருவரும் பேசி வந்திருக்கிறார்கள்.

நண்பர்களாக இருந்தவர்கள் காதலர்களாக மாறிப் போன பின்னர், காதலன் யாஸ்மா குமார் கேட்டுக்கொண்டதால் ஆடைகளை அவிழ்த்து போட்டுவிட்டு வீடியோ காலில் நிர்வாணமாக நின்றிருக்கிறார். இதை அப்படியே யாஸ்மாகுமார் ரெக்கார்டு செய்துள்ளார்.

அடுத்து அந்த வீடியோவை ஸ்வேதாவிடம் போட்டுக்காட்டி, என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். உன் சொத்துக்கள் எனக்கு வேண்டும். இது நடக்கவில்லை என்றால் இந்த அந்தரங்க வீடியோவை எல்லோருக்கும் தெரியும் படி வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஸ்வேதா, திருமணமான தன்னால், தன் குடும்பத்திற்கு பிரச்சனை ஏற்படும் என்று உணர்ந்தவர், யாஸ்மாகுமாரை தீர்த்து கட்டுவதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்து இருக்கிறார் .

இதை அடுத்து மற்றொரு முகநூல் நண்பரும் ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வருமான அசோக்கிடம் சொல்லி புலம்ப, அவர் தனது நண்பரே கார்த்திக் உடன் சுவேதாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். திட்டமிட்டு யாஸ்மாகுமாருக்கு போன் செய்து வீட்டிற்கு வரவைத்திருக்கிறார் ஸ்வேதா. வீட்டிற்கு அவர் ஆசையுடன் வந்தவுடன் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் உடலை சாலையில் வீசியிருக்கிறார்கள் .

அடையாளம் தெரியாத சடலம் என்று போலீசார் விசாரணையை தொடங்கியது. அதன் பின்னர்தான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us