வில்லனாக நடித்தால் அது நான் ஹீரோவாக நடிக்கும் படங்களையே பாதிக்கிறது…

வில்லனாக நடித்தால் அது நான் ஹீரோவாக நடிக்கும் படங்களையே பாதிக்கிறது…

கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்தியாவில் அதிகளவில் படங்கள் நடித்த நடிகராக அறியப்படுபவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்ததால் தான் விஜய் சேதுபதிக்கு இந்த நிலைமை என்று சொல்லப்படுகிறது. முன்னதாக விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் மற்றும் டிஎஸ்பி ஆகிய திரைப்படங்கள் திரையரங்கில் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பே இல்லாமல் போனது. ஆனால் அவர் வில்லனாக நடித்த படங்கள் வெற்றி பெற்றன. கடைசியாக ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளார்.

இதுபற்றி அவரே மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில் “வில்லன் மற்றும் கௌரவ வேடத்தில் என்னை நடிக்க் அனுகுபவர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அதை இப்போது தவிர்த்து விட்டேன். வழக்கமான வில்லன் வேடங்களை நோக்கி அது சென்று கொண்டிருந்தது. சில நேரங்களில் இந்த படங்கள் நான் ஹீரோவாக நடிக்கும் படங்களின் வியாபாரத்தைப் பாதிக்க ஆரம்பித்தன. அதனால் இனிமேல் நான் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடிப்பதற்கு மறுத்து விட்டேன்” எனக் கூறியுள்ளார்.