அந்தரத்தில் தொங்கிய பெண் உடல்! அடித்துக்கொன்ற கிராம மக்கள்!

இந்த செய்தியை பகிருங்கள்

சூனியக்காரி என்று சொல்லி ஒரு பெண்ணை அடித்து கொலை செய்து மரத்தில் தொங்க விட்டுள்ள சம்பவம் கோக்ரஜார் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்து இருக்கிறது.

அஸ்ஸாம் மாநிலத்தில் கோக்ரஜார் மாவட்டத்தில் கணவனுடன் வாழ்ந்து வந்த நடுத்தர வயது பெண் ஒருவர் பில்லி, சூனியம் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக கிராம மக்கள் அவர் மீது குற்றம் சாட்டி வந்தனர் .

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று முதல் அப்பெண்ணை காணவில்லை என்று பெண்ணின் கணவர் கிராமத் தலைவரிடம் புகார் கூறியிருக்கிறார் . கிராம தலைவர் பெண்ணின் கணவரை அழைத்துக் கொண்டு கொசைகான் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வந்த நிலையில் ஊருக்கு வெளியே ஒரு மரத்தில் பெண் சடல ம் ஒன்று தொங்குவதாக தகவல் தெரிய வந்திருக்கிறது. உடனே மனைவியை காணவில்லை என்று சொன்னவரை அழைத்துக் கொண்டு, போனபோதுதான் அது தன் மனைவிதான் என்று சொல்லி கதறி அழுதிருக்கிறார்.

அந்த பெண்ணை மீட்டு பரிசோதனைக்காக உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தியது போலீஸ். பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம். அதன் பின்னர் தான் தூக்கில் தொங்க விடப்பட்டிருக்கிறார் என்ற சந்தேகம் எழுந்து நிற்கிறது. இந்த சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us