காசை அச்சடிக்கா விட்டால் சம்பளம் கொடுக்க முடியாது: ஓகே யா என்று கேட்ட ரணில்: IMF கண்டனம்

இந்த செய்தியை பகிருங்கள்

இலங்கையில் நாம் தொடர்ந்தும் காசை அச்சடிக்காமல் விட்டால், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை தோன்றும், அதுக்கு நீங்கள் ஓகே யா என்று சிரித்தபடியே கேள்வி எழுப்பி உள்ளார் தற்போதைய பிரதமர் ரணில். ஆனால் சர்வதேச நாணய நிதியம் இலங்கை மேலும் காசை அச்சடிக்க கூடாது என்று கடுமையாக கூறி வருகிறது. மக்களிடம் இருந்து வரும் வரிப் பணம், மற்றும் ஏனைய வரிப் பணத்தில், அரசு இயங்க வேண்டும். ஆனால் இலங்கையில் காசை அச்சடித்து, அதனைக் கொண்டு இலங்கை அரசு இயங்கி வருகிறது. இதனால் இலங்கையின் பண மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையுமே தவிர, நிமிரப் போவது இல்லை. இதேவேளை ரணில் பிரதமராக வந்த உடனே இலங்கை, ஏதோ முன்னேற்றம் கண்டது போல இலங்கை அரசு நாடகம் ஆடியுள்ளது. இதனைப் பாவித்து … உண்டியல் காரர்களும் இலங்கை நாணயத்தின் மதிப்பை ஏற்றிக் காட்டுகிறார்கள்….

தற்போதைய நிலவரப்படி ஒரு பிரித்தானிய பவுண்டு இலங்கையில் 440 ரூபாவாக உள்ளது. இலங்கை மத்திய வங்கி 440 ரூபா என அறிவித்துள்ளது. ஆனால் இலங்கைக்கு தற்போது காசை அனுப்ப முற்பட்டால், அதனை அனுப்பும் தனியார் முகவர்கள்(உண்டியல்) 420 ரூபாவையே கொடுப்போம் என்கிறார்கள். இதனால் பல தமிழர்கள் ரியா (RIA) என்ற பிரான்ஸ் சர்வதேச நிறுவனத்தை பாவித்து பணத்தை அனுப்ப ஆரம்பித் துள்ளார்கள். காரணம் அவர்கள் அதிக பணம் கொடுக்கிறார்கள். எது எப்படி இருப்பினும் இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி கண்டு தான், பின்னர் முன்னேறும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us