வெறும் £400 பவுண்டு ட்ரோனை வைத்து 3M மில்லியன் பெறுமதியான ரஷ்ய டாங்கிகளை தகர்க்கும் உக்கிரைன் !

இந்த செய்தியை பகிருங்கள்

உக்கிரைன் நாடு ட்ரோன் தயாரிப்பில் பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறது. இதுவரை அன் நாடு ஆயிரக்கணக்கான, ஆளில்லா தாக்குதல் விமானங்களை தயாரித்து பல நாடுகளுக்கு விற்பனை செய்தும் உள்ளது. இருப்பினும் ரஷ்யா அந்த தொழிற்சாலையை குறிவைத்து தாக்கி அழித்துள்ள நிலையில். ஆளில்லா விமானத்தை தயாரிக்கும் உக்கிரைன் நிபுணர்கள், தற்போது தமது வீட்டில் வைத்தே ஆளில்லா விமானங்களை தாயாரித்து, உக்கிரைன் ராணுவத்திற்கு கொடுத்து வருகிறார்கள். வெறும் 2 குண்டுகளை மட்டும் காவிச் சென்று சரியாக வீழ்த்த வல்ல ஆளில்லா விமானங்களை உக்கிரைன் நிபுணர்கள் தயாரித்து வருகிறார்கள். இதன் விலை வெறும் £400 பவுண்டுகள் மட்டும் தான். ஆனால் இவை தாக்கி, 3மில்லியன் டாலர் பெறுமதியான ரஷ்யாவின் T90 ரக டாங்கி ஒன்று தகர்ந்துள்ளது. அதன் நேரடி வீடியோவும் வெளியாகியுள்ளது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இதனைத் தானோ ? வீடியோ கீழே இணைப்பு


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us