கர்ப்பமான ரகசிய காதலி! 69 வயதில் தந்தையாகும் விலாடிமிர் புதின்? உக்ரைன் போருக்கு இடையே பரபரப்பு

இந்த செய்தியை பகிருங்கள்

மாஸ்கோ: உக்ரைன் மீதான போர் நடவடிக்கைக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் தனது 69வது வயதில் தந்தையாக போவதாகவும், அவரது ரகசிய காதலியான முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கணை அலினா கபேவா கர்ப்பமாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை பிப்ரவரி மாத இறுதியில் துவங்கியது. தற்போது 3வது மாதத்தை நெருங்க உள்ளது.

நாளுக்கு நாள் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மருத்துவமனைகள், பள்ளி கட்டடங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த போருக்கு மத்தியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் அணுஆயுத போரை முன்னெடுக்க உள்ளார். மேலும் போரை வெற்றிகரமாக முடிப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் இந்த முடிவுக்கு வந்துள்ளார். மேலும் போர் யுத்திகளை சரியாக கையாளவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சர், அதிகாரிகள் மீது விலாடிமிர் புதின் அதிருப்தி அடைந்து கோபத்தில் திட்டியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதுமட்டுமின்றி ரஷ்ய படைகளை ஒப்பிடும்போது உக்ரைன் ராணுவம் மிகவும் சிறியது. இருப்பினும் போர் நடவடிக்கையில் ரஷ்யா பின்தங்கியுள்ளதை நினைத்து விலாடிமிர் புதின் வருத்தப்பட்டுள்ளதாகவும், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இதுதொடர்பாக ரஷ்யா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

 

இதற்கிடையே தான் ரஷ்யாவின் புகழ்பெற்ற பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (வயது 38), என்பவர் ஸ்வீட்சர்லாந்தில் தங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினின் ரகசிய காதலி என கூறப்படும் நிலையில் அவர் அங்கு தனது குழந்தைகளுடன் ஆடம்பர பங்களாவில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவரை ஸ்வீட்சர்லாந்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என இணையதளம் மூலம் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இருப்பினும் இதுதொடர்பாக ரஷ்யா, ஸ்வீட்சர்லாந்து சார்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்பவில்லை.

விலாடிமிர் புதினின் காதலியாக கூறப்படும் அலினா கபேவா. இவர் 2004 ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் மொத்தம் 2 பதக்கம் வென்ற இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 9 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளார். புதினின் ஐக்கிய ரஷ்யா கட்சியில் 2007 முதல் 2014 வரை எம்பியாக இருந்தார். கிரெம்ளின் சார்பு ஊடக குழுவான தேசிய மீடியா குழு இயக்குனர்களின் தலைவராகவும் 7 ஆண்டுகளாக செயல்பட்டார். அப்போது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 8 மில்லியன் அமெரிக்கா டாலர் அளவுக்கு அவருக்கு சம்பளம் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

மேலும் மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது மனைவி லியுத்மிலாவை 2014ல் விவாகரத்து செய்தார். இந்த விவாகரத்துக்கும் அலினா கபேவா தான் காரணம் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது வரை விலாடிமிர் புதின், அலினா கபேவா இருவரும் தங்களுக்கு இடையே எந்த வகை உறவு உள்ளது என்பது குறித்து வெளிப்படையாக கூறியது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us