உதட்டில் முத்தமிடுவதும் தொட்டு மகிழ்வதும் குற்றம் அல்ல – பரபரப்பு தீர்ப்பு

இந்த செய்தியை பகிருங்கள்

உதட்டில் முத்தமிடுவதும் தொட்டுக் கொஞ்சி மகிழ்வதும் குற்றம் அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்திருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையின் புறநகர் பகுதியில் வசித்து வரும் அந்த சிறுவன், அப்பகுதியில் உள்ள கடைக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறான். செல்போனில் விளையாடும் ஆன்லைன் விளையாட்டுக்காக அந்த கடையில் ரீசார்ஜ் செய்து வந்துள்ளான். வழக்கமாக இப்படியே அந்த சிறுவன் செய்து வந்திருக்கிறான்.

ஒருநாள் சிறுவனின் தந்தை தான் வைத்திருந்த பணத்தை காணவில்லை என்பதை அறிந்து மகனிடம் கேட்டிருக்கிறார். அப்போதுதான் அந்த சிறுவன் நடந்ததை சொல்லி இருக்கிறான். கடைக்காரரிடம் பணத்தை கொடுத்ததாக சிறுவன் கூறியிருக்கிறான்.

மேலும் சிறுவன், ஒரு நாள் ரீசார்ஜ் செய்ய சென்றபோது அந்த கடைக்காரர் என் உதட்டில் முத்தமிட்டார். அந்தரங்க உறுப்புகளை தொட்டார். என்னை தொட்டு கொஞ்சினார் என்று சொல்லியிருக்கிறான். இதை சிறுவன் சொல்ல கேட்ட தந்தை ஆத்திரப்பட்டு போலீஸிடம் சென்று புகார் அளித்திருக்கிறார். போலீசார் உடனே அந்த கடைக்காரர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஓராண்டுக்கு பின்னர் தற்போது கடைக்காரருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருக்கிறது. ஜாமீன் வழங்கிய போது நீதிபதிகள், ’’ சிறுவனுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியது நிரூபிக்கப்படவில்லை. மேலும் உதவிகளில் முத்தமிடுவதும் தொட்டு கொஞ்சி மகிழ்வதும் இயற்கைக்கு மாறான குற்றங்கள் அல்ல. இவை போக்சோ சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் அல்ல’’ என்று தீர்ப்பளித்தனர். மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us