தனிமையில் ஒன்றாக இருந்தபோது எடுத்த படத்தை காதலியின் உறவினர்களுக்கு அனுப்பிய இளைஞர்

இந்த செய்தியை பகிருங்கள்

தனிமையில் ஒன்றாக இருந்த போது எடுத்த ஆபாச புகைப்படங்களை காதலியின் உறவினர்களுக்கு அனுப்பி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் காதலன் . அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் பூஞ்சோலை குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். 24 வயதான இந்த இளைஞர் வில்லியனூரில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுடன் ஜெயக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது . அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் இறந்து விட்டதால் ஜெயக்குமாருடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார்.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனர். ஜெயக்குமாரின் நடவடிக்கைகளில் போக போக மாற்றம் வந்ததால், அது பிடிக்காமல் அவருடன் பேசுவதை, பழகுவதை தவிர்த்து வந்திருக்கிறார். ஜெயக்குமாருடன் பழகுவதை தவிர்ப்பதற்காகவே அந்த பெண் வெளியூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்திருக்கிறார்.

ஆனால், ஜெயக்குமார் அந்த பெண்ணை விடாமல் செல்போனில் தொடர்ந்து பேசி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். தனிக்குடித்தனம் நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார். அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை.

என்னை திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தாவிட்டால் நீயும் நானும் தனிமையில் ஒன்றாக இருந்த போது எடுத்த ஆபாச படங்களை வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன். உன் உறவினர்களுக்கும் அனுப்பி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். அதற்கும் அந்த பெண் பயப்படாமல், அதற்காக உன்னுடன் வாழ முடியாது என்று சொல்லி இருக்கிறார்.

இவ்வளவு மிரட்டியும் தான் சொன்னதை கேட்கவில்லை என்பதால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார், அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்து ஆபாச படங்களை அவரது உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி இருக்கிறார். இதை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரம் தெரிய வந்ததும் அந்த அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இதையடுத்து அவர் போலீசில் புகார் அளிக்க, போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்துள்ளனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us