இது தான் சிங்களவர்கள் உண்மையான முகம் ? கோட்டாவை காட்டிக் கொடுக்க மாட்டார்களாம் : வீடியோ இணைப்பு !

இந்த செய்தியை பகிருங்கள்

விக்டோரியா பார்லிமன் சதுக்கத்தில்,  சிங்களவர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து, கோட்டபாய வீட்டுக்கு போ என்று போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். அங்கே துண்டுப் பிரசுரங்களோடு வந்த சில முற்போக்கு வாதிகள், இலங்கையில் தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டார்கள் என்ற துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தார்கள். இலங்கையில் தமிழர்களை கொன்றது ராஜபக்ஷர்கள் தான் என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் இருந்தது. அதனைப் பார்த்து கொதித்து எழுந்த சிங்களவர் ஒருவர், “”இலங்கையில் இனப் படு கொலை நடக்கவில்லை””” என்று உரக்க கத்தினார். துண்டுப் பிரசுரங்களை கிழித்துப் போடுங்கள் என்று கோஷமிட்டார். அங்கே நின்ற வேறு சில ஆட்கள், தமிழர்கள் இங்கே போராட்ட அவர்களுக்கு சகல உரிமையும் உள்ளது என்று கூறினார்கள். ஆனால் …

சிங்கள நபர்களோ அதனை ஏற்க்க தயாராக இல்லை. கோட்டபாய மகிந்த ஆகியோர் வீட்டுக்கு போக வேண்டும். அவர்கள் நாட்டை கொள்ளையடித்தார்கள், நாட்டை நாசமாக்கினார்கள், ஆனால் தமிழர்களை கொல்லவில்லை. இது தான் இன்றைய சிங்கள மக்களின் மனப்பாண்மையாக உள்ளது. இன்று வரை இவர்கள் இனத் துவேசம் சற்றும் அகலவில்லை. சாப்பிட வழி இல்லை என்றாலும், கோட்டாவை காட்டிக் கொடுக்க தயாராக இல்லை. ஒரு வகையில் சிங்களவர்களின் ஒற்றுமையை பார்த்து, தமிழர்களும் கற்றுக் கொள்வது நல்லது. கீழே வீடியோ இணைப்பு.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us