அடேங்கப்பா என்னம்மா நடிப்பு ? நாடு எப்படி சூறையாடப்பட்டது என்று விசாரணைக் கமிஷன் போடும் ரணில் !

இந்த செய்தியை பகிருங்கள்

கடந்த தேர்தலில் படு தோல்வியடைந்து, அரசியல் வாழ்கையே கந்தறுந்து நின்ற ரணில் கோட்டபாய கொடுத்த பதவியால் பிரதமர் ஆனார். ராஜபக்ஷர்களோடு மிக மிக நெருங்கிய உறவில் உள்ளவர் ரணில். ஒட்டி உறவாடும் ரணிலுக்கு தான் பிரதமர் பதவியை வழங்கி உள்ளார் கோட்டபாய. இன் நிலையில் நாட்டை யார் சூறையாடினார்கள் என்று விசாரிக்க ஒரு கமிஷனை அமைக்கப் போவதாக இந்த குள்ள நரி ரணி கூறியுள்ளார். இலங்கையை கடந்த 13 வருடங்களாக ஆட்சி செய்து வருவதே ராஜபக்ஷர்கள் தான். அவர்களை தவிர வேறு யாரால் நாட்டை சூறையாட முடியும் ? ரணில் சொல்வதை வைத்துப் பார்த்தால். ராஜபக்ஷர்கள் மீது அல்லவா விசாரணை நடக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லையே ?

இது எல்லாமே கண் துடைப்பு தான். ரணில் வந்த உடனே இலங்கையின் 45B பில்லியன் டாலர் கடன் தீர்ந்து விடுமா என்ன ? முதலில் அவசரகால சட்டத்தை நீக்குங்கள் என்ற கோரிக்கையை தற்போது உலக வங்கி முன் வைக்க உள்ளது. நாடு வழமைக்கு திரும்பினால் மட்டுமே உதவி என்கிறது சர்வதேசம். ஆனால் இந்தியா தான் குட்டையை குழப்பி வருகிறது. தொடர்ந்து டீசலை அனுப்பி, பணத்தை கொடுத்து ராஜபக்ஷர்களை தக்க வைக்கிறது. அன்று புலிகள் புரிந்த போரில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு, இலங்கைக்கு உதவிகளை செய்தது. இன்று சிங்கள மக்களுக்கு எதிராக செயல்பட்டு, ராஜபக்ஷர்களை காப்பாற்றி வருகிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us