சைக்கிள் கேப்பில் மகிந்தவின் நாய் குட்டையை திருடிச் சென்ற நபர்: தனிப்படை அமைத்து கைது செய்யப்பட்ட நபர் !

இந்த செய்தியை பகிருங்கள்

நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது, நகைக் கொள்ளை, வீட்டுக் கொள்ளை வாகனக் கொள்ளை, கஞ்சா கடத்தல் என்று குற்றச் செயல்களின் சொர்க்க பூமியாக இலங்கை மாறி வருகிறது. ஆனால் மகிந்தவின் நாய் குட்டியை காணவில்லை என்ற உடனே சிறப்பு பொலிசார் விசாரணை நடத்தி. நாய் குட்டியை கடத்திய நபரை உடனே கைது செய்து விட்டார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. யோக்- ஷுயா ரெரியர் என்று அழைக்கப்படும் பிரித்தானிய இன நாய் குட்டி ஒன்றை மகிந்த தனது மெதமுலான வீட்டைல் வளர்த்து வந்துள்ளார். காலி முகத்திடலில் கலவரம் மூண்டதும், அதனை அடுத்து மகிந்த , ராஜினா செய்த வேளை, அவரது மெதமுலான வீட்டை ஆர்பாட்டக் காரர்கள் தாக்கி தீ வைத்தார்கள். இப்படி நடக்கக் கூடும் என்று….

முன்னரே ஊகித்த வேலை ஆட்கள் மகிந்தவின் வீட்டை விட்டு சில மணி நேரத்திற்கு முன்னரே தப்பி ஓடி விட்டார்கள். ஆனால் மகிந்தவின் நாய் குட்டி வீட்டில் மாட்டிக் கொண்டதாம். நாய் குட்டியை ஐக்கிய மக்கள் சக்தியின் வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினர் கடத்தி. தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார். இதனை கண்டு பிடித்த பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்றால், தான் நாய் குட்டியை கடத்தவில்லை என்றும். மாறாக காப்பாற்றி உள்ளேன் என்றும் கூறுகிறார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us