17 வயது சிறுமியை 7 ஆண்டாக பலாத்காரம் செய்த 81 வயது கிழவன்.. எப்படி தெரியுமா? டிஜிட்டல் முறையில்..!

இந்த செய்தியை பகிருங்கள்

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் 17 வயது சிறுமி அவரது பாதுகாவலருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியும், அதே பகுதியில் வசிக்கும் 81 வயதான மாரிஸ் ரைடர் என்ற கலைத்துறை ஆசிரியரும் 7 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தனர். அவ்வப்போது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி காம இச்சைக்கு  மாரிஸ் ரைடர் பயன்படுத்தி வந்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் 17 வயது சிறுமி ஒருவர் டிஜிட்டல் முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 81 வயதான ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் 17 வயது சிறுமி அவரது பாதுகாவலருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியும், அதே பகுதியில் வசிக்கும் 81 வயதான மாரிஸ் ரைடர் என்ற கலைத்துறை ஆசிரியரும் 7 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தனர். அவ்வப்போது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி காம இச்சைக்கு  மாரிஸ் ரைடர் பயன்படுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுமியிடம்  மாரிஸ் ரைடர் நெருக்கமாக  இருப்பதை பார்த்த அவரது பாதுகாவலர் அதிர்ச்சியடைந்தார். பின்னர், மாரிஸ் ரைடருக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

ஆனால், சிறுமியையும், அவரது பாதுகாவலரையும் மாரிஸ் ரைடர் மிரட்டியுள்ளார். அதனால், சிறுமியின் பாதுகாவலர் உள்ளூர் போலீசில் புகார் அளித்தார். அதில், எனது பாதுகாப்பில் வசிக்கும் சிறுமியை ஆசிரியர் மாரிஸ் ரைடர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில்;- கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட சிறுமியை மாரிஸ் ரைடர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக அந்த சிறுமியை டிஜிட்டல்  முறையில் பலாத்காரம்  செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட மாரிஸ் ரைடர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் என்றார்.

டிஜிட்டல் பலாத்காரம் என்றால் என்ன?

டிஜிட்டல் பலாத்காரம் என்பது விரல்கள் அல்லது கால்விரல்களை பயன்படுத்தி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்வதை குறிக்கிறது. இந்த வகை பாலியல் பலாத்காரம் குற்றமானது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us