“ஒரு நைட்டுக்கு எவ்ளோ..?…” – மோசமான கேள்விக்கு நீலிமா ராணியின் நெத்தியடி பதில்..!

இந்த செய்தியை பகிருங்கள்

சமீபத்தில் நடிகை நீலிமா ராணி இடம் கேட்கக் கூடாத கேள்வி கேட்ட ஒரு ஆசாமிக்கு நடிகை நீலிமா ராணி பதற்றமும் குழப்பமும் இன்றி கொடுத்துள்ள நெத்தியடி பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் யார் யாரை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற போக்கு நிலவி வருகின்றது. அரசியல் பிரபலங்கள் தொடங்கி சினிமா நடிகர், நடிகைகள் தொட்டு, சீரியல் நடிகர் நடிகைகள் வரை இது பரவி கிடைக்கின்றது.

அதுவும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சின்னத்திரை நடிகைகள் மற்றும் சினிமா நடிகைகள் எதிர்கொள்ளும் இப்படியான வரம்பு மீறல்கள் ஏராளம்.

அடிக்கடி ரசிகர்களுடன் நேரலையிலோ அல்லது கேள்வி-பதில் செக்ஷனாகவோ சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா ராணி ரசிகர்களிடம் கலந்துரையாடினார்.

அப்பொழுது ஆசாமி ஒருவர் ஒரு நைட்டுக்கு எவ்வளவு என்று மோசமான எமோஜிகளை பதிவு செய்து ஒரு கேள்வியை கேட்டிருந்தார். இதை சற்றும் எதிர்பாராத நீலிமாராணி யாரும் எதிர்பாராத ஒரு பதிலை நெத்தியடி பளிச்சென கொடுத்தார்.

அதில் உங்களிடம் இருந்து கொஞ்சம் நாகரீகத்தை எதிர்பார்க்கின்றேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் மற்றவரை கேவலப்படுத்துவது உங்களுடைய வக்கிரமான மனநிலையின் வெளிப்பாடு தயவு செய்து அருகில் உள்ள மனநல மருத்துவரை அணுகுங்கள் உங்களுக்கு உடனடியான உதவி தேவைப்படுகிறது என்று அந்த ஆசாமிக்கு பதில் அளித்துள்ளார் நடிகை நீலிமா ராணி.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us