ஹோட்டலில் சாப்பிடச் சென்ற பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து வல்லுறவுக்கு உள்ளாக்கிய சிங்கள முதலாளியும் ஊழியரும் கைது!!

இந்த செய்தியை பகிருங்கள்

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த மியன்மார் நாட்டு பெண் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் இரு பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் பெந்தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் 30ம் திகதி பெந்தோட்ட பகுதிக்கு தனது நண்பியுடன் சென்றிருந்த மியன்மார் நாட்டு பெண் ஒருவர் ஹோட்டல் ஒன்றில் உணவு வாங்கியுள்ளனர். பின்னர் தாம் சுய நினைவை இழந்த நிலையில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக 26 வயதான மியன்மார் நாட்டு பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன்,

ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவில் போதைப் பொருள் கலந்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் ஹோட்டல் உரிமையாளர் ,மற்றும் ஊழியர்கள் இருவரை கைது செய்துள்ளனர். பொலிசார் பின்னிப் பெடல் எடுத்த நிலையில், அனைத்துக் குற்றங்களையும் அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. அவர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார். பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ள பெண்ணிடம், வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us