இரவில் காதலன் வீட்டில் தங்க ஆசைப்பட்ட பெண்! காலையில் சடலமாக மீட்பு

இந்த செய்தியை பகிருங்கள்

இரவில் காதலன் வீட்டில் தங்க ஆசைப்பட்ட அந்த பெண் காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் பர்ணாளி லோக்ரே. இவர் 27 வயது இளைஞர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். கடந்த ஆறு மாதங்களாகத் தான் இருவரும் பழகி வந்திருக்கிறார்கள். இருவரும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்று வந்திருக்கிறார்கள். இரவில் அவரவர் வீடு திரும்ப நினைத்திருந்த நிலையில் அந்த இரவில் காதலன் வீட்டில் தங்க ஆசைப்பட்டிருக்கிறார்.

சூழ்நிலை கருதி இப்போது வீட்டில் தங்க முடியாது என்று மறுத்திருக்கிறார் காதலன். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் மனமுடைந்த அந்த இளம் பெண், தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து காதலனுக்கு போன் செய்து வாக்குவாதம் செய்து கொண்டே இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த காதலன் வாட்ஸ்அப் நம்பரை பிளாக் செய்து விட்டு தூங்கியிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த பர்ணாளி லோக்ரே காதலன் வீட்டிற்கு சென்று இருக்கிறார். இதை கொஞ்சம் எதிர்பார்த்திராத காதலன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். வேறு வழியின்றி அவரை வீட்டிற்குள் அழைத்திருக்கிறார். வாட்ஸப் நம்பரை எதற்கு பிளாக் செய்தாய் என்று கேட்டு சண்டை போட்டு இருக்கிறார்.

காதலின் நடவடிக்கையால் மனம் உடைந்த காதலி காதலன் வீட்டிலேயே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காதலி சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த காதலன் போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் காதலன் வீட்டில் இளம் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் இது கொலையா? அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us