“என்ன ட்ரெஸ் இது..? இதை தூக்கவே நாலு பேரு வேணும் போல இருக்கே..” – விருது விழாவில் நடிகை தமன்னா..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை தமன்னா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் படு பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.

பார்ப்பதற்கு சிட்டி பெண் போல, மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் கிராமத்து கதாபாத்திரங்கள் அமைதியான கதாபாத்திரங்கள் என்றாலும் தன்னுடைய அபாரமான நடிப்பால் அப்படியான கதாபாத்திரங்களை லாவகமாக நடித்து முடிக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் கல்லூரி, தர்மதுரை போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். துவக்கத்தில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்தாலும் தன்னுடைய மார்க்கெட் ஏற ஏற முன்னணி கதாபாத்திரங்கள் முன்னணி கதாநாயகிகள் நடிக்கும் படங்களில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டார்.

எஸ் ஜே சூர்யா வின் வியாபாரி எங்க திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார் தமன்னா. கிளுகிளுப்பான பல காட்சிகளில் நடித்து இளசுகள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார் தொடர்ந்து.

நடிகர் அஜீத், விஜய், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து விட்டார்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுதும் ஹிட்டடித்த பாகுபலி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த அவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் என்ன மாற்றத்தை தூக்கிட்டு போவதற்கு நாலுபேர் வேணும் போல இருக்கு என்று கலாய்த்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us