பள்ளி மாணவியை பெண் கேட்ட ரவுடி! தட்டி கேட்ட தாய் வெட்டி கொலை

இந்த செய்தியை பகிருங்கள்

பள்ளி மாணவியை திருமணம் செய்து தரச் சொல்லி ரகளை செய்திருக்கிறார் ரவுடி. இதை தட்டி கேட்டு தனது தாயை பட்டாகத்தியால் வெட்டி கொலை செய்திருக்கிறார் விக்னேஷ்.

சென்னையில் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ். 28 வயதான இந்த வாலிபர் ரவுடியாக அப்பகுதியில் வலம் வருகிறார். இவர் மீது 12 திருட்டு வழக்குகள் உட்பட 15 வழக்குகள் உள்ளன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் இவர் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்த விக்னேஷ் அதே பகுதியில் சேர்ந்த பிளஸ்-1 மாணவி மீது காதல் கொண்டிருக்கிறார். அந்த மாணவியிடம் சென்று தான் காதலிப்பதாக தெரிவித்திருக்கிறார் . அதற்கு அந்த மாணவி எதுவும் சொல்லாத நிலையிலும், இவர் தொடர்ந்து காதலிப்பதாக தெரிவித்து வந்திருக்கிறார்.

நேற்று மது போதையில் இருந்த விக்னேஷ் திடீரென்று அந்த மாணவியின் வீட்டின் முன்பு சென்று நின்று கொண்டு மாணவியை எனக்கு பிடித்து இருக்கிறது. அந்த பெண்ணை எனக்கு பிடித்திருக்கிறது. அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்டு பிறகு யாரும் வெளியே வராததால் கற்களை எடுத்து வீட்டின் மீது வீசி இருக்கிறார்.

பக்கத்தில் இருந்த ஹேமாவதி என்பவரது வீட்டிலும் கற்களை வீசி இருக்கிறார். இதை ஹேமாவதி கண்டித்து இருக்கிறார் . உடனே விக்னேஷ் கத்தியை காட்டி மிரட்டி இருக்கிறார். இதை பார்த்ததும் விக்னேஷின் தாயார் ஓடிவந்து சத்தம் போட்டிருக்கிறார்.

போதையில் இருந்து விக்னேஷ் உடனே ஆத்திரம் வந்து, கையில் இருந்த பட்டாக்கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த ஹேமாவதி சம்பவ இடத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

ஆதம்பாக்கம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விக்னேஷை தேடி வந்த நிலையில் வேளச்சேரியில் பதுக்கி இருந்த வரை கைது செய்துள்ளனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us