சிறுமியை கடத்திய போலீஸ்! நண்பருடன் கூட்டு பாலியல் வன்கொடுமை

இந்த செய்தியை பகிருங்கள்

வேலியே பயிரை மேய்ந்த கதையாக போலீஸ் ஒருவரே சிறுமியை கடத்திச் சென்று தனது நண்பருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது இந்த கொடுமை.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் இளைஞர்களின் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வந்திருக்கிறது. இந்த வீடியோ விவகாரம் சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கும் தெரிய வந்திருக்கிறது.

அதிர்ச்சி அடைந்து அவர்கள் அது குறித்து மகளிடம் விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான் தன்னை போலீஸ் ஒருவர் தன்னை கடத்தி சென்றதாகவும் அங்கே அவருடன் இன்னொருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்தார்கள். இதைப் பற்றி வெளியே சொன்னால் வீடியோவை எல்லாருக்கும் பரப்பி விடுவேன் என்று மிரட்டினார்கள். அதனால் தான் நான் யாரிடமும் சொல்லவில்லை. அப்படி இருந்தும் இந்த வீடியோவை வெளியிட்டு விட்டார்கள் என்று சொல்லிவிட்டு அழுதிருக்கிறார்.

இதைக் கேட்டு மேலும் அதிர்ந்த பெற்றோர், அலிகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் என்பதில் வழக்குப் பதிவு செய்த போலீசார் , சிறுமி கடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்பொழுது 17 வயது அந்த சிறுமியை கடத்திய இரண்டு பேரில் ஒருவர் கன்னோஜ் மாவட்ட ஆயுதப்படை காவலராக இருக்கும் மகேந்திர சிங்(24) என்பது தெரிய வந்திருக்கிறது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் தான் அவருடன் வந்த நபர், அவரது நண்பர் அமித் குமார்(23) என்பது தெரிய வந்திருக்கிறது.

இதை அடுத்து இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். போலீஸ் ஒருவரே சிறுமியை கடத்திச் சென்று நண்பருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் அலிகர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us