இந்திய ரூபாவில் தீர்ப்பனவுகளை மேற்கொள்ள இலங்கைக்கு வாய்ப்பு-!

இந்த செய்தியை பகிருங்கள்

இலங்கையுடனான வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கான தீர்ப்பனவுகளை, இந்திய ரூபாவில் மேற்கொள்ள இந்திய மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இதனூடாக, ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்தின் பொறிமுறைக்கு அப்பால், இந்திய ரூபாவில், தீர்ப்பனவுகளை மேற்கொள்ள இலங்கைக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்திய ஏற்றுமதியாளர்கள், இலங்கையுடன் முன்னெடுக்கும் வர்த்தக நடவடிக்கைகளின்போது எதிர்நோக்கும் சிக்கல் நிலையைக் கருத்திற்கொண்டு, இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளதாக இந்திய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us