கிளிநொச்சியில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி GOTA GO GAMA நோக்கிய துவிச்சக்கர வண்டி பயணம்!

இந்த செய்தியை பகிருங்கள்

GOTA GO GAMA ஆர்ப்பாட்ட களத்தை நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை குடும்பஸ்தர் ஒருவர் இன்று (20) ஆரம்பித்துள்ளார்.

இன்று காலை விசுவமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணத்திற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கினர்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், பொருளாதார நெருக்கடி தொடர்பில் கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த பயணத்தை கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற 32 வயதுடைய குடும்பத்தரே இவ்வாறு ஆரம்பித்தார்.

4 நாட்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்து சென்றடைய உள்ளதாகவும் தெரிவிக்கும் அவருக்கு மக்கள் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us