ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

இந்த செய்தியை பகிருங்கள்

ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு:

1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்
2. சுசில் பிரேமஜயந்த் – கல்வி அமைச்சர்
3. கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர்
4. விஜயதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
5. ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்
6. ரமேஷ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
7. மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
8. நளின் பெர்னாண்டோ – வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
9. டிரான் அலஸ் – பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னதாக நான்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பரமானம் செய்து கொண்டிருந்தனர்.

அதன்படி,

தினேஷ் குணவர்தன – பொது நிர்வாக அமைச்சர்,
பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் – வெளிவிவகார அமைச்சர்
பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி அமைச்சர்
காஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்

9 புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்! (வீடியோ)

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us