முகத்தை மூடி செய்தி வாசிக்க பெண் ஊடகவியலாளர்களுக்கு உத்தரவு – சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்

இந்த செய்தியை பகிருங்கள்

 

முகத்தை மூடி செய்தி வாசிக்க பெண் ஊடகவியலாளர்களுக்கு தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் தலிபான் தனது ஷரியா சட்டம் மூலமாக அந்நாட்டின் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரம் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றது.

ஆண்களின் துணை இல்லாமல் பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. முகத்தை முழுவதுமாக மூடியபடி பணி நேரத்தில் உடை அணிய வேண்டும் உள்ளிட்ட சட்டங்களை அமுல்படுத்தியது. இதையும் மீறி பெண்களுக்கு நான்கு சக்கர வாகனம் ஓட்ட உரிமம் வழங்கக் கூடாது என்றும் சட்டம் வகுத்தது.

இந்நிலையில், தற்போது பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடியே செய்தி வாசிக்க வேண்டுமென தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us