இலங்கை அரசாங்கத்தின் அதிரடி முடிவுகளால் மீண்டும் நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கு-!

இந்த செய்தியை பகிருங்கள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலுள்ள வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளுக்கு மாத்திரமே பெற்றோல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனத்தினால் இன்று(20) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய லங்கா ஐஓசி நிரப்பு நிலையங்களில் கேன்கள், கொள்கலன்கள் அல்லது போத்தல்களில் பெற்றோல் வழங்கப்படாது எனவும் லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

See the source image

இது மாத்திரமன்றி, நேற்று கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டது.

இதற்கமைய 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

See the source image

நாட்டில் தற்போது மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய மரக்கறிகள் அனைத்தும் ஒரு கிலோ கிராம் 400 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருந்துப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது.

See the source image

இலங்கையின் தற்போதைய அரசாங்த்தின் செயற்பாடுகள் நடவடிக்கைகள் காரணமாகவும்,அரசாங்த்தின் அதிரடி தீர்மானங்களினாலும் இவை அனைத்துமே நாட்டு மக்களின் இயல்பு நிலையை மேலும் மோசமடைய செய்யும் நிலை உருவாகியுள்ளது.

எனவே ,எதிர் வரும் வாரங்களில் மீண்டும் நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கு நிலை ஏற்படும்.

இன்னும் சில அன்றாட வாழ்க்கைகான செலவுகள் அதிகரித்துள்ளமை மக்களுக்கு பெரும் சுமையான மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us