கிழக்கு உக்கிரைன் கடலில் நிலை கொண்டுள்ள, ரஷ்ய கப்பல்களை விரட்டி அடிக்க அல்லது தாக்கி அழிக்க என, படு பயங்கரமான ஏவுகணைகளை (long-range anti-ship missiles) அமெரிக்கா USA உக்கிரைனுக்கு வழங்க உள்ளது. சுமார் 350 மைல் தூரம் வரை சென்று எதிரி நாட்டுக் கப்பலை தானாக தாக்கி அழிக்க வல்ல இந்த ஏவுகணையை, அமெரிக்கா கொடுக்குமேயானால். ரஷ்ய கப்பல்கள் அந்த பிராந்தியத்தில் நிலை கொண்டு இருக்க முடியாத நிலை தோன்றும். உக்கிரைன் நாட்டில் பல மில்லியன் பெறுமதிடான கோதுமை தானியம் உள்ளது. ஆனால் அவர்களால் அதனை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. காரணம் உக்கிரைன் நாட்டில் உள்ள ஒரே கடல் பகுதியை ரஷ்யா கைப்பற்றி வைத்திருப்பதே. இந்த தடையை நீக்கவே அமெரிக்கா முனைந்து வருகிறது.