வயதான பெண்னைக் கடத்திய 16 வயதுச் சிறுவன்… பின்னர் செய்த அதிர்ச்சி சம்பவம்!!!!

இந்த செய்தியை பகிர

இந்தியாவின் ரேவா மாவட்டத்தில் உள்ள கைலாஷ்புரிக் கிராமத்தில் வசிக்கும் 58 வயதுடைய அமலா என்னும் பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார், இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 16 வயதுடைய நிக்லேஷ் என்னும் சிறுவன் அடிக்கடி இவரது வீட்டுக்கு வந்து ரிவி பார்த்துப் போவதனை வழக்கமாகக் கொண்டிருந்தான். இவ்வாறு இருக்க குறித்த பெண்ணின் செல்போன் ஒரு நாள் திடீரெனக் காணாமல் போனது, இதனையடுத்து குறித்த சிறுவன்மீது சந்தேகம் கொண்டு சிறுவனை வினவ அவன் மறுத்து விட்டதால் போபத்தில் சிறுவனைத் தாக்கிக் காயப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் இதை அறிந்த அறிந்த சிறுவனின் நண்பர்கள் கடுமையாகக் கேலி செய்ததால் மனதளவில் பாதிக்கப்பட்டான். இதனால் குறித்த பெண்னை பழிவாங்க நினைத்தான், இந்நிலையில் நேற்று முன்தினம் இரவுகுறித்த பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அங்குச் சென்ற சிறுவன்குறித்த பெண்ணின் கையையும் காலையும் கட்டிவிட்டு கூரிய ஆயுதத்தினால் தாக்கியதும் அவர் சம்பவ இடத்தில் பலியானதால் அவரது ஆடைகளைக் களைந்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டுத் தலைமறைவானான். பின்னர் அங்கு வந்த குடும்பத்தினரை இச்சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளதுடன், உடனடியாகப் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து பொலிசார் நடாத்திய விசாரணையில் குறித்த சிறுவன் காணாமல் போனது தெரிய வந்தது, பின்னர் தனிப்படை அமைத்துப் பதுங்கியிருந்த சிறுவனைக் கைது செய்தபோது மேற்படி சம்பவம் தெரிய வந்தது.


இந்த செய்தியை பகிர