
பிரபல நடிகை ஒருவர் தன்னை பற்றிச் சர்ச்சைக்குரிய வகையில் ட்விட் செய்தவர்மீது அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஊர்வசி ரெளட்டாலா. இவர் தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளியான சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள இவர் தற்போது ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ஊர்வசி ரெளட்டாலா இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைச் சுமார் 65 மில்லியன் ஃபாலோயர்கள் பாலோ செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதள பிரபலம் ஒருவர் ஊர்வசி ரெளட்டாலா குறித்து சர்ச்சைக்குரிய டிவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ’ஏஜென்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்தபோது ஊர்வசியை ஹீரோ அகில் அகினேனி என்பவர் தவறாக நடந்து கொண்டதாகத் தெரிவித்திருந்தார்.

