விடுதலைப் புலிகள் தலைவரின் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கைத்துப்பாக்கியை வைத்திருந்த இராணுவ உயர் அதிகாரி!!!

இந்த செய்தியை பகிர

விடுதலைப் புலிகள்

கம்பஹா பிரதேசத்தில் வசிக்கும் முன்னால் இராணுவ கெப்டன் ஒருவர் கடந்த 2018 ஆண்டு இராணுவத்தில் முக்கிய பதவியில் இருந்தபோது மருத்துவ காரணங்களுக்காக சேவையிலிருந்து ஓய்வுபெற்றார். தற்போது குறித்த பிரதேசத்தில் இவர் வசிக்கும் வீட்டில் அடிக்கடி துப்பாக்கி சத்தம் கேட்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த இராணுவ அதிகாரியிடம் இருந்த நவீனரக மிகச் சிறிய கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

அதாவது இத்துப்பாக்கியானது விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவரினால் பயன்படுத்தப்பட்ட அதி விசேட வகை மைக்ரோ ரக கைத்துப்பாக்கியாகும். குறித்த நபர் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவத்தின் உயர் பதவியில் இருக்கும்போது இவ் துப்பாக்கியினை தன்வசம் எடுத்துக்கொன்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் இவ் துப்பாக்கியில் விடுதலைப் புலிகளை பறை சாற்றும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வகையான அரியவகை துப்பாக்கியானது அவர்களிடத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர