இலங்கையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது கர்ப்பிணி யுவதியை கடத்திச் சென்ற நபர்!!! அதிரடி தேடுதலின் பின் கைது!!!

இந்த செய்தியை பகிர

கர்ப்பிணி

அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலையில் கல்விகற்கும் மானவியை காதல் வலையில் வீழ்த்தி வயிற்றில் குழந்தையைக் கொடுத்த 24 வயதுடைய இளைஞர் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுமி நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் பணியகத்தின் கண்கானிப்பின் கீழ் அநுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவியை குறித்த நபர் மீண்டும் ஆசை வார்த்தைகளைக் கூறி கடத்திச் சென்றுள்ளார். இதனையடுத்து தேடுதல்வேட்டையினை ஆரம்பித்த பொலிஸார் குறித்த யுவதியினை தம்புள்ளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு கொன்டு சென்ற வேளையில் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை பகிர